இணையத்தை கலக்கும் தீபிகா படுகோனே , ரன்வீர் சிங் படங்கள்!

பாலிவுட்டின் கிசு கிசு ஜோடிகளில் இப்போதைக்கு டாப் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தான். அடிக்கடி பொது இடங்களில் ஜோடிகளாக சிக்கும் இவர்கள் சமீபத்திலும் புகைப்படங்களாக இணையத்தை கலக்கி வருகிறார்கள். 

ரன்வீர் சிங்கின் பிறந்தநாள் இன்று. இதை முன்னதாக கொண்டாடும் விதமாக ரன்வீரும் , தீபிகா படுகோனேவும் மும்பையின் பிரபல ஸ்டார் ஹோட்டலில் கடந்த வெள்ளியன்று பார்ட்டி நடத்தியுள்ளனர்.பார்ட்டியில் இவர்கள் இருவர் மட்டுமே என்பதுதான் சிறப்பு. 

 

இரவு 2 மணிக்கு இருவரும் பார்ட்டியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதை பலரும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்ததோடு இன்று ரன்வீர் பிறந்தநாள் தினத்திலும் இவர்கள் இருவரின் புகைப்படங்களையும் பகிர்ந்து ரன்வீருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தீபிகா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சந்தித்து தனியாக பிறந்தநாள் விழா கொண்டாடியதில் பாலிவுட்டில் சற்றே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!