நெட்டில் ஹிட்டடிக்கும் கிங் கான் செல்ஃபி! | SRK's Selfie in Full Swing

வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (10/07/2015)

கடைசி தொடர்பு:19:19 (10/07/2015)

நெட்டில் ஹிட்டடிக்கும் கிங் கான் செல்ஃபி!

சாதாரண மனிதன் துவங்கி , ஆசாதாரண மனிதன் வரை இந்த இணையம் விட்டுவைக்கவில்லை. செல்ஃபி, சமூக வலைதளம் என இப்போதெல்லாம் என்னது ட்விட்டர்ல நீ இல்லையா என கிண்டலடிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது.

இப்படி உலகையே வளைத்த இணையம் இந்திய சினிமாவின் கான்களை மட்டும் விட்டுவிடுமா என்ன. முப்பெரும் கான்களில் அமீர்கான் இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை ட்விட்டரில் பதிவுகள் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் சல்மான் கானும், ஷாருக் கானும் தினம் தினம் ஏதெனும் ட்வீட்டுகள், புகைப்படங்கள் என பதிவிட்டு ரசிகர்களை இணைப்பிலேயே வைத்திருக்கிறார்கள்.

தில்வாலே, ஃபேன் என இரு படங்களில் பிசியாக நடித்து வரும் ஷாருக் கான் சமீபத்தில் தன் குழந்தைகளுடன் கலிபோர்னியாவிற்கு கல்வி சுற்றுலா சென்று வந்துள்ளார். அங்கே மாண்டேஜ் ஹோட்டலில் தங்கியவர் அப்படியே ஒரு செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தன் மகன் , மகள் சகிதமாக ஷாருக் போஸ் கொடுத்த இந்த செல்ஃபி இதுவரை 5ஆயிரம் ரசிகர்களால் பகிரப்பட்டுள்ளது. மேலும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிர்கர்கள் அதற்கு விருப்பம் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தான் இப்போ இணையத்தை கலக்கி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close