சச்சின் - அஞ்சலி, விராட்- அனுஷ்கா.... விம்பிள்டனில் பரபரப்பு கொடுத்த ஜோடிகள்! | Sachin and Virat spotted in Wimbledon match

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (11/07/2015)

கடைசி தொடர்பு:13:55 (11/07/2015)

சச்சின் - அஞ்சலி, விராட்- அனுஷ்கா.... விம்பிள்டனில் பரபரப்பு கொடுத்த ஜோடிகள்!

   கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தப் போட்டிகளில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி ரோஜர் ஃபெடரர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

நேற்று இவர் வெற்றி பெற்ற செய்தியைக் காட்டிலும் இன்னொரு செய்திதான் இந்திய விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சச்சின் அவரது மனைவி அஞ்சலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும், விராட் கோலி என இரண்டு ஜோடிகளும் இந்த இறுதிப் போட்டிகளை நேற்று லண்டனில் ஜாலியாக வேடிக்கை பார்க்க , மற்றவர்கள் இவர்களை வேடிக்கை பார்க்க என இணையம் பற்றிக் கொண்டது.

நெட்டில் விம்பிள்டனில் சச்சின், விராட் ஜோடி என புகைப்படங்கள் செய்திகள் என வைரலில் சுற்றி வருகிறார்கள் இந்த யூத் சென்சேஷனல் ஜோடிகள். இந்தியாவின் டாப் ஹாட் ஜோடிகளின் லிஸ்டில் விராட்டும், அனுஷ்கா ஷர்மாவுக்கும் உள்ள மவுசு நாமறிந்ததே. விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

எனினும் இதுகுறித்து மீடியா , மற்றும் பொதுமக்களுக்கு எந்த கருத்தும் சொல்வது என்பது தேவையில்லாத விஷயமாக கருதுவதாக விராட் சில மாதங்களுக்கு முன்பு சொன்னது குறிப்பிடத்தக்கது. இது எங்கள் சொந்த விஷயம். கேர்ள் ஃப்ரண்டா என திரும்பத் திரும்பக் கேட்டு ஏன் எங்களை சங்கடப் படுத்துகிறீர்கள் என்றும் கொஞ்சம் கோபமாகவே பேசினார் விராட் கோலி.பார்ப்போம் இவர்களின் கிசுகிசுக்கள் எதுவரை செல்கிறது என்பதை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close