இந்தியில் ரீமேக் ஆகிறது ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்...நாயகியாக தீபிகா படுகோனே?

இரண்டு கேன்சர் நோயாளிகள், தங்களது வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் காதல் வருகிறது . இருவரும் நோயாளிகளாக போராடும் தருணம் , இடையில் அவர்களை திசை திருப்ப உருவாகும் காதல் என ஹாலிவுட்டில் மிக செண்டிமெண்டான படமாகவே சென்ற வருடம் வெளியானது ‘ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’.

ஷைலீன் வூட்லீ, ஆல்சன் எல்கோர்ட் நடிப்பில் வெளியான இந்த படம் காதலை மரண விளிம்புடன் இணைத்து பலரையும் கொஞ்சம் கண் கலங்கச் செய்த படமென்றே கூற வேண்டும். தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார் இந்தியின் ஹிட் படம் ஃபைண்டிங் ஃபேனி’ கொடுத்த இயக்குநர் ஹோமி அடஜானியா.

இந்த படத்தின் நாயகியாக ‘தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஹீரோவாக வருண் தவானிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி இந்த படம் இந்தியில் உருவானால் தீபிகா படுகோனே முடியை வெட்டிக் கொண்டு படம் முழுவதும் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இருக்க வேண்டும். இந்த பாத்திரத்தை ஏற்று நடிப்பது எந்த ஒரு நாயகிக்கும் சற்றே சவாலான விஷயம் தான். பார்க்கலாம்.

வாழவேண்டும் என்ற ஆசையில் காதலிக்கும் நாயகன் , நாயகி, ஆனால் கேன்சர் இருவரையும் போராட்டத்திற்குள் தள்ளிவிடும். படம் முழுக்க உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளாக காதலை வேறு கோணத்தில் சொல்லிய படம் . இப்போது இந்தியாவிற்கு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!