ஐஸ்வர்யாவால் புதுப்பட வாய்ப்பை நிராகரித்தாரா சல்மான் கான்! | Salman Khan avoid the new Movie Because Of Aishu!

வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (16/07/2015)

கடைசி தொடர்பு:14:53 (16/07/2015)

ஐஸ்வர்யாவால் புதுப்பட வாய்ப்பை நிராகரித்தாரா சல்மான் கான்!

 சல்மான் கான் , ஐஸ்வர்யா ராயின் காதல் பாலிவுட் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிவிட்டார். எனினும் இன்னமும் சல்மான் கான் அந்த காதலுக்கு பிறகு பெரிதாக கல்யாணம், காதல் என ஈடுபாடு செலுத்துவதில்லை. இடையில் காத்ரீனாவுடன் கிசுகிசுவில் சிக்கினாலும் தன் வாழ்வில் திருமணம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை என்பதை சமீபத்திய பேட்டியில் கூட உறுதி செய்தார். 

காத்ரீனா கைஃப்ஃபுக்கும், ரன்பீர் கபூருடன் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட்டில் ’பாகுபலி’ ஸ்டைலில் ஒரு சரித்திர படம் உருவாக உள்ளது. ‘பஜிராவோ மஸ்தானி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை 120 கோடி பட்ஜெட்டில் தானே தயாரித்து இயக்குகிறார் சஞ்சய் லீலா பன்சாலி. 120 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படம் காதல் கலந்த சரித்திர படமாக உருவாக உள்ளது. 

ஹீரோவாக ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, மற்றும் ப்ரியங்கா சோப்ரா நடிக்க உள்ள இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் என்பதுதான் சிறப்பு. ஆனால் ஐஸ்வர்யா நடிக்கிறார் என்ற ஒற்றை காரணத்தினாலேயே படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார் சல்மான் கான். 

இந்த வருடம் 18ம் தேதி டிசம்பர் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தை சல்மான் கான் நிராகரித்துள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக வருத்தமடையச் செய்துள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close