கமலுடன் என்னை ஒப்பிடாதீர்கள், அஜய்தேவ்கன் அச்சம் | Dont Compare With Kamalhassan, Says Ajay

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (18/07/2015)

கடைசி தொடர்பு:13:18 (18/07/2015)

கமலுடன் என்னை ஒப்பிடாதீர்கள், அஜய்தேவ்கன் அச்சம்

ஒரு படம் அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்திருக்கிறது என்றால் அது த்ரிஷ்யம் படமாகத்தான் இருக்கும். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி பெரும் ஆதரவைப் பெற்ற படம் தான் த்ரிஷ்யம்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் சமீபத்தில் கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய ஹிட் அடித்தது. கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக பாபநாசம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து அஜெய் தேவ்கன் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் இந்தியிலும் த்ரிஷ்யம் ரீமேக் ஆகியிருக்கிறது. அனைத்துப் பணிகளும் முடிந்து இம்மாதம் 31ம் தேதி வெளியாகவிருக்கிறது த்ரிஷ்யம்.

மோகன்லால், கமல்ஹாசனை நடித்ததை விட உங்கள் நடிப்பில் பெரிய ஹிட் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “  கமல்ஹாசனையும், மோகன்லாலையும் என்றும் எனக்கு போட்டியாக பார்த்ததில்லை. அவர்கள் இருவருமே தென்னிந்திய சினிமாவின் லெஜெண்ட்ஸ். 30-35 வருடங்கள் இதே துறையில் தங்களை அர்ப்பணித்த கலைஞர்கள் அவர்கள். அவர்களுடன் என்னை ஒப்பிடுவதில் விருப்பமில்லை என்கிறார் அஜெய் தேவ்கன்.

கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தபு நடிக்கிறார். அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த த்ரிஷ்யம் இந்தியிலும் பாஸ் மார்க் வாங்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close