வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (28/07/2015)

கடைசி தொடர்பு:12:59 (28/07/2015)

APJ மறைவுக்கு தவறான இரங்கல் - அனுஷ்கா ஷர்மா மீது ரசிகர்கள் கடுங்கோபம்!

 பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலியின் காதலியுமான அனுஷ்கா ஷர்மா மீது ரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதியும், அறிவியலாளருமான அப்துல்காலம் மரணமடைந்ததையடுத்து சமூக வலைதளங்கள், வாட்ஸப் உள்ளிட்டவை துவங்கி நாடே சோகக் கடலில் மூழ்கியுள்ளது. 

பலரும் தங்களது புரொஃபைல் புகைப்படம், ஸ்டேட்டஸ் என அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அவரது புகைப்படமோ அல்லது வெறும் கருப்பு நிறமாகவோ வைத்து வருத்தத்தை தெரிவித்துவருகிறார்கள். 

மேலும் வைரமுத்து, சிவக்குமார், தனுஷ் , உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அனுஷ்கா ஷர்மாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில் அப்துல் கலாம் என்பதற்கு அப்துல் கலாம் அசாத் என பெயரைத் தவறாக பயன்படுத்த ரசிர்கள் சமுதாயத்தில் பெரிய இடத்தில் இருக்கும் நீங்களே இப்படி பெயரைத் தவறாக பயன்படுத்தலாமா என பல கேள்விகளை கேட்டு திட்டித் தீர்க்க சிறிது நேரத்தில் டீவிட்டை எடுத்துவிட்டார். 

கடைசியாக போட்ட ட்வீட்டில் கூட மூன்றாவது முறை நீங்கள் ட்வீட் செய்கிறீர்கள் எனக் கூறி ரசிர்கள் அவருக்கு அறிவுரைகளைக் கூறிவருகிறார்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்