நான் தான் முதலில் காதலை சொன்னேன் , காதலில் விழுந்தார் ப்ரியாமணி!

 தேசிய விருது பெற்ற நடிகையான ப்ரியாமணி தற்போது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்துவருகிறார். மேலும் தமிழில் பெரிதாக வாய்பில்லை என்றே கூறவேண்டும். 

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மலையாள பத்திரிக்கைக்கு பேட்டியளித்தபோது நான் எனக்கானவரை தேர்ந்தெடுத்துவிட்டேன் ஆனால் இவ்வளவு சீக்கிரம் இதுகுறித்து அறிவிக்க வேண்டாம் என நினைக்கிறேன் எனக் கூறினார். 

இந்நிலையில் தனது காதலர் குறித்து தற்போது வெளியிட்டுள்ளார். மும்பையைச் சார்ந்த தொழிலதிபரான முஸ்தபா ராஜ் தான் தனது காதலர் எனவும் ஆனால் கல்யாணம் இப்போது இல்லை எனவும் கூறியுள்ளார். நட்சத்திர கிரிக்கெட் அணிகளின் ஒரு அணியின் மேனேஜராக இருக்கும் முஸ்தபா நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோதுதான் இருவருக்கும் நட்பு மலர்ந்தது எனவும், முதலில் எனக்குத்தான் அவரை பிடித்தது என மிகத் தெளிவாக கூறியுள்ளார் ப்ரியாமணி. 

மெஸேஜில் எனக்கு உங்களை பிடித்திருக்கிறது என தெரிவித்தேன், பின் இருவருக்கும் பிடித்துப்போக நான்கு வருடங்களாக காதலித்து வருகிறோம்.எனினும் திருமணம் இப்போது இல்லை எனக் கூறியுள்ளார் ப்ரியாமணி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!