இந்தியில் ரீமேக்காகிறது ஓ காதல் கண்மணி!

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடத்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி வெளியான படம் ‘ஓ காதல் கண்மணி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பிரபலம் ஆனது. 

ஒரு பக்கம் இளைஞர்கள் திசை திருப்பும் படமென சர்ச்சைகளை கிளப்பினாலும் மற்றொரு பக்கம் வசூலையும், ஆதரவுகளையும் பெற்று படம் ஹிட்டடித்தது. தெலுங்கில் ‘ஓகே பங்காரம்’ என்ற பெயரிலும் டப்பாகி வெளியானது குறிப்பிடத்தக்கது. 

கல்யாணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் ‘லிவ்விங் டு கெதர்’ கலாச்சாரத்தை பகிரங்கமாக சொல்லி அதே சமயம் இது இந்தியர்களை பொருத்தமட்டில் ஒத்துவாராத ஒன்று என்பதையும் படத்தின் முடிவாக வைத்த படம். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. 

துல்கர் சல்மான் பாத்திரத்தில் ’ஆஷிகி’ படப் புகழ் ஆதித்யா ராய் கபூரும், நித்யா மேனன் கேரக்டரில் சோனாக்‌ஷி சின்ஹாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்ளனர். இந்த ரோலில் முதலில் தேர்வானவர்கள் அலியா பட்டும், வருண் தவானும் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தை இயக்கவிருக்கிறார் ஷாத் அலி. இவர் இந்தியில் வெளியான தில் சே, ராவண், குரு போன்ற படங்களில் மணிரத்னத்திற்கு துணை இயக்குநராக பணியாற்றியவர். மேலும் ‘சாத்தியா’, ’பண்டி அவுர் பாப்லி’,’ கில் தில்’ போன்ற பாலிவுட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தி என்பதால் இன்னும் கொஞ்சம் கலர்ஃபுல்லான விஷயங்கள் படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!