அப்துல் கலாமை சந்திக்காதது எனக்கு பேரிழப்பு: சல்மான்கான் வேதனை! | SalmanKhan Tweeted ,I dint meet Kalam, my loss

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (30/07/2015)

கடைசி தொடர்பு:11:36 (30/07/2015)

அப்துல் கலாமை சந்திக்காதது எனக்கு பேரிழப்பு: சல்மான்கான் வேதனை!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நேரில் சந்திக்காதது தனக்கு ஏற்பட்ட பேரிழப்பு என இந்தி நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இந்தி நடிகர் சல்மான்கான் தனது டுவிட்டர் வலைதளத்தில், ''அப்துல் கலாமுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மீது எப்போதும் எனக்கு அன்பும், மரியாதையும் இருக்கிறது.

அறிவியலாளராகவும், ஜனாதிபதியாகவும் பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்தியர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். அப்துல் கலாம் கடந்த வாரம் பதிவிட்டுள்ள டுவிட்டில், 'ஐ.ஐ.எம். அவரது வழியில் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

அவர் ஒரு சிறந்த ஆசிரியரும் கூட. அவர் சொல்லிக் கொடுத்த பாடம் என்றென்றும் நம்மோடு இருக்கும். நீங்கள் யாரையாவது பார்க்க எண்ணினால் தாமதிக்காதீர்கள். நான் வெகுகாலமாக அப்துல் கலாமைச் சந்திக்க நினைத்தேன். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அவரை சந்தித்து இருக்கலாம். ஆனால், அவரை சந்திக்காமல் போனது எனக்கு ஏற்பட்ட பேரிழப்பு'' எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close