வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (30/07/2015)

கடைசி தொடர்பு:17:29 (30/07/2015)

பால்கியின் அடுத்த படம் கி அண்ட் கா!

 ’சீனிகம்’, ‘பா’, மற்றும் ஷமிதாப் உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்த பால்கி எப்போதும் தன் படங்களில் வித்யாசமான கதைகளையே கையாளுவார். அதே பாணியில் இப்போது ஆண் , பெண் சமம் என்பதைக் குறித்த படமாக ‘கி அண்ட் கா’ படத்தை இயக்க இருக்கிறார். 

கரீனா கபூர், அர்ஜுன் கபூர் முதல் முறையாக நடிக்க இருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பிசிஸ்ரீராம். பெரிய லட்சியத்துடன் இருக்கும் மனைவி, மனைவியின் லட்சியத்தை அடைய உதவும் அன்புக் கணவன். இவர்கள் இருவரின் அறிவு சார்ந்த விஷயங்கள் ஒன்று சேர்கையில் என்ன நடக்கிறது எனபதுதான் படத்தின் கதையாம். 

இந்த படத்தில் பால்கியின் ஆஸ்தான நாயகனான அமிதாப் பச்சன் சீறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். லடுக்கி, லடுக்கா என்பதே ‘கி அண்ட் கா’ என படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாம்.  2016ம் ஆண்டு வெளியாக உள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பால்கியின் முந்தைய படங்க்ளில் இளையராஜா இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படத்திலும் இளையராஜாதான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்