வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (31/07/2015)

கடைசி தொடர்பு:14:11 (31/07/2015)

45 வயதில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் தபு!

கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் தபு. அதுமட்டுமில்லாமல் இந்திப் படங்களிலும் நடித்துவருகிறார்.  கடைசியாக த்ரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கில் தபு போஸீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தமிழில் பாபநாசம் படத்தில் ஆஷா ஷரத் கதாப்பாத்திரத்தில் தான் இந்தியில் தபு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தபுவிற்கு 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. முன்னர் தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து தோல்வியில் முடிந்ததால் இதுவரை திருமணம் செய்துகொள்ள வில்லை என்ற செய்தியும் பரவி வந்தது. தொடர்ந்து தபுவின் குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க பல்வேறு முயற்சிகளையும் எடுத்தனர். ஆனால் தமக்கு திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இன்று வரை திருமணம் செய்துகொள்ளாமலே தனிமையில் வாழ்ந்துவந்தார் தபு. 

தற்பொழுது திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறாராம் தபு. மும்பை தொழில் அதிபரை மணக்கப் போவதாக தகவல்கள் பரவிவருகின்றன. திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்