இவர்கள் நடிகர்கள் மட்டுமல்ல ! | They are not Actors Only!

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (31/07/2015)

கடைசி தொடர்பு:17:32 (31/07/2015)

இவர்கள் நடிகர்கள் மட்டுமல்ல !

 நாம் பார்த்து ரசித்த அபிமான நடிகர்கள் சினிமாவில், ஆடுவார்கள், பாடுவார்கள், சண்டை போடுவார்கள், ஆனால் சொந்த வாழ்வில் இவர்களிடம் உள்ள திறமை குறித்தோ அல்லது சிறப்பு பழக்கம் குறித்தோ நாம் யோசித்ததே இல்லை. இதோ பாலிவுட்டின் டாப் நடிகர்கள் சிலரின் தனித் திறமைகள், 

சல்மான் கான்

100 கோடி சம்பளம் வாங்கும் வசூல் பாலிவுச்ட் நாயகனான சல்மான் கான் , ஒரு நல்ல ஓவியர். மிக அற்புதமான பெயிண்டிக் திறமையும் உண்டு. 

அமீர்கான்

நல்ல நடிகர், சமூக அக்கறை கொண்ட மனிதர் என்[பதைத் தாண்டி , செஸ் விளையாடுவதில் திறமைசாலி என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். செஸ் மாஸ்டரான விஸ்வநாத் ஆனந்தையே ஒரு சமயம் தினறடித்துள்ளார் . அதை ஒரு பேட்டியின் விஸ்வநாத் ஆனந்தே சொல்லி மெய்சிலிர்த்தது குறிப்பிடத்தக்கது. 

அக்‌ஷய் குமார்

நம்மூரின் அஜித் போல கொஞ்சம் அதீத திறமைசாலி. மார்ஷியல் கலையில் திறமை வாய்ந்த அக்‌ஷய், நன்றாக சமைக்கத் தெரிந்தவர், புகைப்படக் கலைஞரும் கூட. 

கங்கணா ரணாவத்

தேசிய விருது பெற்ற இந்த குயின் , வட இந்திய உணவுகளை மிக அருமையாக சமைக்கத் தெரிந்தவர். அதே போல் அழகாக பரிமாறவும் தெரிந்தவர். 

வித்யா பாலன்

இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நடிப்புக்காக தனி இடம் பிடித்த நாயகி. ஆனால் இவர் ஒரு மிமிக்ரி கலைஞர் என்பது தெரியுமா. முக்கியமாக வித்யாசமான குரல்களை எலுப்பும் திறமை கொண்டவர். நல்ல கவிதையும் எழுதுவாராம். 

ரந்தீப் ஹூடா

வித்யாசமான வில்லன் பாத்திரங்களுக்கு புகழ் பெற்ற ரந்தீப், குதிரை ஏற்றம் தெரிந்தவர். மேலும் ஷோ ஜம்பர் எனப்படும் குதிரை சரியான வேகத்தில் ஜம்ப் செய்ய வைக்கும் திறன் உடையவர். 

ஜூஹி சாவ்லா

எவர் க்ரீன் நாயகியான ஜூஹி கிளாசிக்கல் பாடகி. முறைப்படி சங்கீதம் பயின்றவரும் கூட. 

பிரியங்கா சோப்ரா

இவரின் இசை ஞானம் , பாலிவுட்டில் வேண்டுமானால் புதிது. ஆனால் நமக்கு தமிழன் படத்திலேயே விஜய்யுடன் உள்ளத்தைக் கிள்ளாதே பாடல் பாடி நிரூபித்துவிட்ட உலக அழகி. மேலும் தன் உடைகளை தானே வடிவமைக்கும் திறனும் உண்டு. 

ஷாகித் கபூர்

கனவு நாயகனாக ஷாகித் நல்ல டான்ஸர் என்பது தெரியும், ஆனால் அவர் நல்ல டீஜே என்பது தெரியுமா. இசையை கச்சிதமாக கலவை செய்து ஒலிபரப்புவதில் வல்லவர். 

சைஃப் அலி கான்

இசையமைப்பாளர் மட்டுமல்ல, தேர்ச்சி பெற்ற கிடார் இசையமைப்பாளரும் கூட. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்