பஜ்ராங்கி பாய்ஜான் கதையை உண்மையாக்கிய சல்மான் : 14 வருடங்கள் கழித்து இந்தியா வருகிறார் கீதா! | Salman Khan Helped The Girl Geeta to come to India!

வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (06/08/2015)

கடைசி தொடர்பு:14:53 (06/08/2015)

பஜ்ராங்கி பாய்ஜான் கதையை உண்மையாக்கிய சல்மான் : 14 வருடங்கள் கழித்து இந்தியா வருகிறார் கீதா!

பாகிஸ்தான், கராச்சியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வந்த ரயிலில் கண்டெடுக்கப்பட்ட வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிப் பெண் கீதா, தான் யார் எங்கிருந்து வந்தோம் என்பதை சொல்ல முடியாது இந்தியாவிற்கு வர முடியாமல் பாகிஸ்தானிலேயே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் . 14 வருடமாக தனது பெற்றோரைக் காண போராடி வரும் கீதாவிற்கு சல்மான் கான் உதவி செய்து அவரை இந்தியாவிற்கு வர உதவி செய்துள்ளார்.

எத்தனையோ போராட்டங்கள், யார் யாரோ முயற்சி செய்தும் கீதாவால் சொந்த மண்ணிற்கு திரும்ப முடியவில்லை. ஐநாவின் மனிதநேய உரிமைகள் மூலம் பாகிஸ்தான் அமைச்சரிடம் பேசி கீதா இந்தியாவிற்கு திரும்ப வழி செய்துள்ளார் சல்மான் கான். 

சமீபத்தில் சல்மான் நடிப்பில் வெளியான படம் ‘பஜ்ராங்கி பாய்ஜான்’. ராஜமௌலியின் தந்தை கதையம்சத்தில் உருவான இப்படம் 400 கோடிகளை வசூலித்து ஹிட்டடித்துள்ளது. இந்த படத்தின் கதைப்படி சல்மான் கான் இந்தியாவிலிருந்து ஒரு சிறுமியை பாகிஸ்தான் கொண்டு சேர்ப்பது தான் கதை. இந்தக் கதை தற்போது உண்மையாக மாறியுள்ளது. பாகிஸ்தானில் தான் யார் என தெரியாமல் 14 வருடங்களாக போராடி வந்த இந்தியப் பெண் கீதாவை சல்மான் கான் முயற்சி எடுத்து இந்தியா வருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். 

எனினும் இது குறித்து பலரும் சல்மானை பாராட்டி வரும் நிலையில் தினமும் ட்விட்டரை அதிகமாக பயன்படுத்தி வரும் சல்மான் விளம்பரமாகவோ, அல்லது தகவலாகவோக் கூட பகிரவில்லை என்பதுதான் இன்னும் ஆச்சர்யம். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close