உலகில் அதிகம் சம்பாதித்த பட்டியலில் அமிதாப், சல்மான், அக்‌ஷய்குமார்! | World Most Salary Gets Heros!

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (06/08/2015)

கடைசி தொடர்பு:15:17 (06/08/2015)

உலகில் அதிகம் சம்பாதித்த பட்டியலில் அமிதாப், சல்மான், அக்‌ஷய்குமார்!

உலக அளவில் கடந்தாண்டு அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியலில் இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான் 7வது இடத்தில் இருக்கிறார்கள். இருவரும் தலா ரூ.213 கோடி சம்பளம் வாங்கி உள்ளனர். நடிகர் அக்‌ஷய்குமார் 9வது இடத்தில் இருக்கிறார். இவர் கடந்தாண்டு சம்பாதித்தது ரூ.207 கோடி.
 

உலக அளவில் அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியலை 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், அக்‌ஷய்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உலக அளவில் அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியலில் 'அயன்மேன்' படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவ்னி தொடர்ந்து 3வது ஆண்டாக முதல் இடத்தில் இருக்கிறார். இவர் கடந்தாண்டு வாங்கிய மொத்த சம்பளம் ரூ.510 கோடி ஆகும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஜாக்கிசான். இவர் கடந்தாண்டு சம்பாதித்தது ரூ.318 கோடி.

இந்த சம்பள பட்டியலில் 7வது இடத்தை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பிடித்து இருக்கிறார். இவர் கடந்தாண்டு சம்பாதித்த தொகை சுமார் ரூ.213 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனுக்கு இணையாக சல்மான்கானும் ரூ.213 கோடி சம்பாதித்து இருக்கிறார்.

இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் 9வது இடத்தில் இருக்கிறார். இவர் கடந்தாண்டு சம்பாதித்தது ரூ.207 கோடி. இந்தி நடிகர் ஷாருக்கான் 18வது இடத்தில் இருக்கிறார். இவர் கடந்த வருடம் வாங்கிய சம்பளம் சுமார் ரூ.166 கோடி. இந்தி நடிகர் ரன்பீர் கபூர் ரூ.96 கோடி பெற்று 30வது இடத்தில் இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close