வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (07/08/2015)

கடைசி தொடர்பு:11:55 (07/08/2015)

அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்!

மறைந்த ராக்கெட் நாயகன் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவிருக்கிறது. இப்படத்தை நிலா மதாப் பாண்டா என்பவர் இயக்கவிருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி பெரிதும் பேசப்பட்ட படம் " ஐ அம் கலாம்". சிறுவன் ஒருவனின் கனவை மையமாக வைத்தே இப்படம் உருவானது. இப்படம் தேசிய விருதுகள் உட்பட 11 விருதுகளை வென்றது. இப்படத்தை இயக்கிய இந்தி பட இயக்குநர் நிலா மதாப் பாண்டா தான் கலாமின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவிருக்கிறார்.

இப்படத்தில் அப்துல்கலாமின் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான வேலைகளை இயக்குநர் ஆரம்பித்துவிட்டாராம்.

இப்படம் பற்றி இயக்குநர் பாண்டாவிடம் கேட்டபோது, “ கலாம் நம்முடன் இல்லை. ஆனால் அவரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்களையும், வலிகளையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது மிக முக்கியமான ஒன்று. கலாம் அவர்களைப் பற்றியான முழு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். பட வேலைகளை முழு வேகத்துடன் தொடங்கிவிட்டேன். கலாம் இப்படத்தின் மூலம் என்றும் உயிர்ப்புடன் இருப்பார். கலாம் கதாபாத்திரத்தில் அமிதாப் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்