வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (11/08/2015)

கடைசி தொடர்பு:12:03 (11/08/2015)

த்ரீஇடியட்ஸ், பிகே படங்களின் இயக்குநர் ராஜ்குமார்ஹிரானிக்கு விபத்து

இந்தியில், முன்னாபாய்எம்பிபிஎஸ், த்ரிஇடியட்ஸ், பிகே உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார்ஹிரானி. அவர் சாலைவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இன்றுகாலையில் அவர் மோட்டார்பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரிடம் பணியாற்றுகிறவர் புதிதாக வாங்கிய பைக்கைக் காட்டி அதை ஓட்டிப்பார்க்கச் சொன்னதாகவும், அதை ஒட்டியபோதே அவர் விபத்துக்குள்ளானதாகவும் சொல்லப்படுகிறது.

மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையின் தீவிரசிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அவருடைய முன்னாபாய்எம்பிபிஎஸ் படம்தான் கமல் நடிப்பில் வெளியான வசூல்ராஜாஎம்பிபிஎஸ். அவருடைய த்ரிஇடியட்ஸ் படம்தான் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்