சல்மான் கான் தயாரிக்கும் படத்திற்கு தடை கோரி வழக்கு?

 சல்மான் கான் தயாரிப்பில் , நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஹீரோ’. நடிகர் ஆதித்யா பன்சோலி மகன் சூரஜ் பன்சோலி , மற்றும்  சுனில் ஷெட்டியின் மகள் ஆதித்யா ஷெட்டி நாயகன் நாயகியாக நடிக்க உள்ள இப்படம் ‘1983ம் ஆண்டு ஜாக்கி ஷெரஃப், மற்றும் மீனாட்சி ஷேசாத்ரி நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் ரீமேக் .

இந்த படத்திற்குக் கதை எழுதியவர் மறைந்த எழுத்தாளர் ராம் கெல்கர். இவருடைய கதைக்கான சரியான உரிமத்தைப் பெற்ற கான், ரீமேக் செய்யவிருப்பதாக அறிவித்தார். ராம் கெல்கர் குடும்பம் படப்பிடிப்பு தானே நடந்து வருகிறது என கண்டுக்காமல் விட்டுவிட்டனர்.

தற்போது செப்டம்பர் 11ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராம் கெல்கர் குடும்பத்துக்கு சேர வேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கவில்லை என்ற நிலையில் படக்குழு மீது ராம் கெல்கர் குடும்பம் வழக்கு தொடுத்துள்ளனர். 

கோவிந்தா, வினோத் கண்ணா  முக்கிய பாத்திரங்களிலும் மற்றும் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்க உள்ள இப்படத்தில் சல்மான் கான் ‘மெயின் ஹூன் ஹீரோ’ என்ற டைட்டில் பாடலை தன் சொந்த குரலில் பாடியுள்ளார். 

தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த விளம்பரங்கள் சூடு பறக்க போய்க்கொண்டிருக்கும் வேளையில் படக்குழு மீது வழக்கு தொடுத்ததுள்ள நிலையில் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!