லிப் லாக் காட்சிகளை கேட்டு வாங்கும் அலியா பட்!

ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அலியா பட். ஹைவே ,2 ஸ்டேட்ஸ் என அலியாவிற்கு இந்தி மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம். மோஹித் ஷர்மா, பூஜா பட், ராகுல் பட், முக்கியமாக இம்ரான் ஹாஷ்மியின் உறவுக்கார பெண்தான் அலியா பட். 

துறு துறு கண்கள், பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம், மேக்கப் இல்லாமல் எளிமையாக பொது இடங்களில் உலா வருவது என அலியா பல இளசுகளின் நெஞ்சங்களை அள்ளிவிட்டார். தொடர்ச்சியாக தான் நடிக்கும் படங்களில் ஹீரோக்களுடன் லிப் லாக் முத்தக் காட்சிகளில் நடிக்கும் அலியா அடுத்தடுத்து படங்களில் அவரே கேட்டு வாங்கி நடிக்கிறாராம். 

ஷாகித் கபூருடன் இவர் இணைந்து நடிக்கும் ஷாண்டார் படம் ரோமண்டிக் காதல் படம். படத்தில் முத்தக் காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் விகாஷ் பால் விருப்பப்பட சரி எதற்கு நடிகர்களை சங்கடத்தில் விடவேண்டும் என காட்சியை எடுத்துவிடலாம் என முடிவு செய்ய இதை அறிந்துக் கொண்ட அலியா பரவாயில்லை அதனாலென்ன என முத்தக் காட்சியை வைக்கச் சொல்லிவிட்டாராம். இப்போது வருண் தவான், சித்தார்த் மல்ஹோத்ரா, அர்ஜுன் கபூர் என இந்த லியா பட்டின் முத்த லிஸ்ட்டில் புதிதாக ஷாகித் கபூரும் இணைந்து விட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!