பாகிஸ்தானில் இந்தியப் படத்திற்குத் தடை!

 ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியில் வெளியாக உள்ள படம் ‘பாண்டம்’. சைஃப் அலி கான், காத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். படத்திற்கு இசை பிரிதம் சக்ரபோர்தி. மும்பை தாக்குதலையும், தீவிரவாதத்தையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது. 

இந்தப் படத்திற்குத் தான் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அந்நாட்டின் சென்சார் பார்வைக்கே படம் இன்னும் போகவில்லை என்ற நிலையில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

இதைப்பற்றி இயக்குநர் கபீர் கான் கூறிகையில் ‘இந்தப் படத்திற்கு தடை விதித்துள்ளது விசித்திரமாக இருக்கிறது. இந்தப் படம் தீவிரவாதத்திற்கு எதிரான படமே தவிர்த்து பாகிஸ்தானுக்கு எதிரான படமன்று. சென்சார் பார்வைக்கே கொண்டுசெல்லாமல் தடை விதித்தது ஆச்சர்யமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட  லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனமரான ஹபீஸ் சாயித், தன்னை இந்தப் படத்தில் தவறாகச் சித்தரித்து தன் பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளதாகவும், தான் அணிகிற உடைகளைச் சுட்டும் காட்சிகள் இடம்பிடித்துள்ளதால் படத்திற்கு தடை வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த லாகூர் கோர்ட் படத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!