இதுவும் போச்சா..புலம்பும் அசின்?

 எம் குமரன் படம் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்த மலபார் தான் அசின். தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்கள், பெரிய படங்கள் என மேலே வந்த அசின் திடீரென கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டுக்கு பறந்தார். சல்மான் கான், அக்‌ஷய் குமார், என பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்தவர் இடையில் படங்களே இல்லாமல் ஓரங்கட்டப்பட்டார். 

ஓரிரு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அபிஷேக் பச்சனுடன் இணைந்து ‘ஆல் ஈஸ் வெல்’ படம் நடித்து சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பெரிதாக நம்பி இருந்த அசினுக்கு பேரிடியாக மாறியுள்ளது படத்தின் ரிசல்ட். படத்தில் ஒரு சுவாரஸ்யம் இல்லை, ஒரு காட்சிகளும் ரசிக்கும்படி இல்லை என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் படத்தின் முன் பாதி முழுக்க தேமே என செல்கிறது, காட்சிகளும் கோமாளித்தனமாகவும், சுத்தமாக லாஜிக் இல்லாமல் உள்ளதாலும் படம் ப்ளாக் பஸ்டர் லிஸ்டில் இருந்து பின்னுக்கு சரிந்துள்ளது. இந்நிலையில் பாலிவுட்டில் ஒரு நல்ல ஹிட் கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகி திருமண வாழ்வில் ஈடுபட இருந்த அசினுக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டது. 

அசின், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவைத் திருமணம் செய்ய இருப்பது நாம் அறிந்தது. ஆல் ஈஸ் வெல் படத்தின் ரிசல்ட்டிற்கு பிறகு திருமணம் என முடிவு எடுத்திருந்தார் அசின்.  தற்போது படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால் அடுத்தக்கட்டமாக திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!