ஸ்ருதி ஹாசனுக்கு 3ம் இடம்...தமன்னாவுக்கு 9ம் இடம்!

 இப்போதெல்லாம் 30 வயதுக்கு கீழ் இருப்பது ஒரு சிறப்பு போல எல்லா பக்கமும் 30 வயதிற்கு கீழ் உள்ள லிஸ்ட் என்ற பாணியில் ஹீரோ ஹீரோயின்களில் யார் பெஸ்ட் என்ற சர்வே துவங்கிவிட்டது. இந்நிலையில் பாலிவுட்டின் 30வயதிற்கு கீழ் உள்ள நடிகைகளில் யார் செம ஹாட்டு மச்சி என்ற சர்வே எடுத்துள்ளார்கள். 

பிரபல பாலிவுட் இணையம் நடத்திய இந்த சர்வேயில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் முதலிடத்திலும், தீபிகா படுகோனே இரண்டாம் இடத்திலும், ஸ்ருதி ஹாசன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர் ,சல்மானின் ’கிக்’ படம் மூலம் ஹீரோயினாக அறியப்பட்டு வெகுவாக பாராட்டப்பட்டவர் ஜாக்குலீன் தற்போது அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோனே, அலியா பட் இவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தில் இருக்கிறார். 

1. ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், 2. தீபிகா படுகோனே, 3. ஸ்ருதி ஹாசன் , 4. அனுஷ்கா ஷர்மா, 5. இலியானா, 6. அலியா பட், 7.கங்கணா ரணாவத், 8.யாமி கௌதம் 9.தமன்னா, 10. ஷ்ரதா கபூர் ஆகியோர் ஆலிவுட்டின் 30 வயதுக்கு கீழ் உள்ள ஹாட் ஹீரோயின்களாக தேர்வாகியுள்ளனர். 

தனக்கு போட்டியாக தாம் கருதுவது தமன்னா என சமீபத்திய ட்விட்டர் லைவ் சேட்டில் ஸ்ருதி ஹாசன் சொன்னது நாம் அறிந்ததே. எனினும் இருவரும் தொழி ரீதியாக போட்டிகள் இருப்பினும் எந்த நிகழ்ச்சியாயினும் பிரியாத் தோழிகளாக தோன்றுவது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!