பாதிக்கப்பட்ட விவாசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி செய்யும் நானா படேகர்!

 வித்யாச நடிப்பும் கெட்டப்பும், முக்கியமாக அலட்டாத நடிப்பிற்காகவும் இந்தியா முழுக்க மிகப்பிரபலமான நடிகர் நானா படேகர்.இப்போது விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்து பல இளைய சமுதாயம் முதல் பணக்காரர்கள் வரை திரும்பி பார்க்க வைத்துள்ளார். 

மூன்று தேசிய விருதுகளுக்கு சொந்தக் காரரான நானா படேகர் இப்போது விவசாய குடும்பங்களின் இதயங்களுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார். தன் சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவின் ஐந்து பகுதிகளில் ஒன்றான மாரத்வாடாவின் பீட் நகரத்தில் 112 விவசாய குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பண உதவிகள் செய்துள்ளார். 

112 குடும்பங்களும் விவாசாயம் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல வானம் பொய்த்து போதல், அரசாங்க தலையீடு, ஜெனிடிக் முறையில் மாற்றப்பட்ட விதைகள் இவற்றால் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பம். அந்த குடும்பங்களின் விதவை பெண்களை நேரில் சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு உதவியும் புரிந்துள்ளனர் நானா படேகரும் நடிகர் மகராந்த் அன்ஸ்பூரும். 

இதுபோல் நாம் நாட்டின் எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள் . தங்களது ஊரின் விவசாயக் குடும்பங்களை இவர்கள் கவனித்தாலே இந்தியாவின் விவசாய பிரச்னையை தீர்த்துவிடலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!