ஓபனாக பேசிய ராதிகா: சன்னி லியோனே இவங்களுக்கு பின்னாடிதானாம் | ' Varun Dhawan is Special to Me' says Radhika Apte

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (25/08/2015)

கடைசி தொடர்பு:14:00 (26/08/2015)

ஓபனாக பேசிய ராதிகா: சன்னி லியோனே இவங்களுக்கு பின்னாடிதானாம்

ஒவ்வொரு வருடமும் கூகுள் தேடலில் யார் முதலிடம் என இணைய போரின் மற்றொரு வடிவம் நடக்கும் இதில் கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர் சன்னி லியோன் தான். ராகினி எம்.எம்.எஸ் , ஏக் பஹெலி லீலா என சன்னி டாப் லிஸ்ட். 

இந்த வருடம் அரையாண்டு முடிந்ததை அடுத்து திடீரென சன்னி லியோனை பின்னுக்கு தள்ளிவிட்டு ராதிகா அப்தே இடம் பிடித்துள்ளார். ரஜினியின் கபாலி படத்தில் நாயகி, ‘அகல்யா’ குறும்படம், நெட்டில் வெளியான ராதிகா அப்தேவின் ஆபாச வீடியோக்கள் சர்ச்சை, மேலும் குறும்படத்தின் சென்சார் செய்யப்படாத வீடியோ ரிலீஸ், எல்லாவற்றிற்கும் மேல் ஹண்டர் படம் என ராதிகா டாப்பு. 

அடுத்த கட்டமாக வருண் தவானுடன் பத்லபூர் படத்தில் இணைந்து நடித்தார். இப்போது இருவரும் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்கள். செம ஹாட்டு மச்சி ஹீரோவான வருண் முதலில் அலியா பட்டுடன் கிசுகிசுவில் சிக்கினார் .இருவரும் இல்லை என மறுத்தனர் அந்த பிரச்னை அத்துடன் முடிந்தது.

இப்போது ராதிகா அப்தேவுடன் வருண் தவான் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். என்ன உங்களுக்குள்ள என மைக்கை நீட்டினால், அசராமல் எனக்கு வருண் தவானை பிடித்திருக்கிறது, வருண் தவான் என் கூட இருக்கும் போது நான் ரொம்ப ஸ்பெஷலாக உணர்கிறேன்.  வருண் எனக்கு ஸ்பெஷல் தான்” என மறைக்காமல் சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ஹீரோயின் ராதிகா அப்தே. பார்ரா! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்