உங்களுக்கெல்லாம் சென்சாரே கிடையாதா: அதிர்ச்சி கொடுத்த கேலண்டர் கேர்ள்ஸ் படத்தின் வீடியோ!

 சமூக பிரச்னைகளை மையமாக வைத்து படங்கள் எடுக்கும் இந்தி இயக்குநர் தான் மதுர் பந்தர்கர். தனது அடுத்த படமாக ‘கேலண்டர் கேர்ள்ஸ்’ படத்தை எடுத்து வருகிறார். இந்த வருடம் வெளியாக உள்ள இப்படத்தின் டீஸரே கொஞ்சம் பாலிவுட் வாசிகளை அதிர்ச்சியாக்க, இப்போது படத்தின் பாடல் வீடியோ ஒன்று வெளியாகி உறைய வைத்துள்ளது. 

5 பெண்கள் பிகினி உடையில் போஸ் கொடுக்க நடனம் ஆட மேலும் பிகினியே மிகவும் கிளாமரான உடை அதில் அவர்கள் நடனமோ கொஞ்சம் அதிகமாகவே கிளாமர் ரசம் சொட்டுகிறது. இதில் படத்தின் கதை விஜய் மல்லையாவின் கேலண்டர் மற்றும் அதைச் சார்ந்து நடத்தப்பட்ட போட்போஷூட்கள் என அதன் பின்னனி என்ன என்பதே கதையாம்.

இதில் சில சிக்கலான அரசியல்கள் கூட வெளியாகலாம் என இப்போதே கிசுகிசுக்கப்படுகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் படமெடுத்து வருகிறார் மதுர் பந்தர்கர். புதிதாக அறிமுகமாக உள்ள படத்தின் ஐந்து நாயகிகளும் மதுர் வடிவமைத்த கேரக்டரை உள்வாங்கி நடித்து வருகிறார்களாம். எனினும் இந்த பாடல் வீடியோவைக் காண்கையில் யுடியூப் தளத்தின் சென்சார் என்ன செய்கிறது என்றே தோன்றுகிறது. ஒரு சில அதிக படியான கவர்ச்சி வீடியோக்கள் வருகையில் இமெயில் மற்றும் வயது கேட்கும் யூடியூப் இந்த வீடியோவை எப்படி விட்டனர் என்றே தோன்றுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!