வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (29/08/2015)

கடைசி தொடர்பு:16:37 (29/08/2015)

பெண்களே இப்படிச் செய்தால் நியாயமா: மன்னிப்புக் கேட்ட சோனாக்‌ஷி சின்ஹா!

 ஒரு பக்கம் ஈவ் டீஸிங், பலாத்காரம் என பெண்களுக்கு எந்த பிரச்னை நடந்தாலும் சட்டம், மாதர் அமைப்புகள் என பல பெண்களுக்கு சாதகமான விஷயங்கள் சமூகத்தில் இருக்க ஒரு சில பெண்கள் இதை கொஞ்சம் பயன்படுத்தவும் செய்கிறார்கள். 

 இந்நிலையில் தன்னை ஈவ் டீஸிங் செய்ததாக கூறி ஜஸ்லீன் கவுர் என்ற பெண் வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இதனால் அந்த நபர் கது செய்யப்பட்டுள்ளார். ஆனால் விசாரணையில், ஈவ் டீஸிங் செய்யவில்லை என்றும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஜஸ்லீன் பப்ளிசிட்டிக்காக அவ்வாறு செய்ததாகவும் தெரிவித்தார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் அந்த நபருக்கே ஆதரவாக கூறியுள்ளனர். 

சட்டத்தின் பயனையும், சமூகத்தின் ஆதரவையும் பயன்படுத்தி ஒரு நல்ல மனிதருக்கு தண்டனை கிடைத்ததில் ஒரு பெண்ணாக தான் வெக்கப்படுவதாக ஜஸ்லீன் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா. மேலும் பெண்கள் சார்பாக அந்த நபரிடம் இதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா.

 தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பதால் யாரும் சிறியவர் ஆகிவிட மாட்டார்கள். அப்படி தான் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர் என்றும் ட்வீட் செய்துள்ளார் சோனாக்ஷி. இந்த எண்ணம் பெண்கள் அனைவருக்கு இருப்பின் சட்டங்களும் பெண்களுக்கு சாதகமாக நல்ல நடவடிக்கைகளை எடுக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்