மீண்டும் ரீமேக், தனிஒருவன் இயக்குநர் மோகன்ராஜா முடிவு

 மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘தனி ஒருவன்’. படத்திற்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. படத்தின் விமர்சனங்களும் சரி, வசூலும் சரி அனைத்து தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

இந்நிலையில் தனி ஒருவன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம் மோகன் ராஜா . இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மற்ற மொழியில் வெளியாகி ஹிட்டடித்த படங்களை தமிழில் அதிகம் ரீமேக் செய்துள்ளேன். அந்தப் படங்களும் வெற்றிபெற்றுள்ளன. ஆனால் ரீமேக் ராஜா என எனக்கு பெயர் கிடைத்தது. 

அந்தப் பெயரை மாற்றவே ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கினேன். முழுக்க முழுக்க ரசிகர்களை மனதில் வைத்து படத்தின் கதையை மூன்று வருடமாக உருவாக்கினேன். இப்போது இந்தப் படத்தை இந்தியில் சல்மான்கான் பார்த்துள்ளார். படம் குறித்து நல்ல கருத்துகள் அவரிடமிருந்து கிடைத்துள்ளன. இந்தியிலும் இப்படத்தை இயக்க தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மோகன் ராஜா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!