வருண் தவான், அலியாபட் வரிசையில் அடுத்த ஜோடி ரெடி!

2016ஆம் ஆண்டு வெளியாக உள்ள படம் ‘ரங்கூன்’. இரண்டாம் உலகப் போரின் போது நடக்கும் கதையாக உருவாக இருக்கிறது.

முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் சைஃப் அலி கான் மற்றும் ஷாகித் கபூர். ஹீரோயினாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். முக்கோண காதல் கதையாக உருவாகி வரும் இப்படம் இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்கள் சார்ந்த மற்றொரு புதிய தகவலாக ஷாகித் கபூரின் தம்பி இஷானும், சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கானும், கரண் ஜோகரின் புதிய படத்தின் மூலம் ஹீரோ ஹீரோயினாக நடிக்க உள்ளனர்.

இயக்குநர் யார் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. இதே பாணியில் தான் வருண் தவான் மற்றும் அலியா பட் இருவரையும் கல்லூரி மணவர்களாக ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் படத்தின் மூலம் அறிமுகம் செய்தார் கரண் ஜோகர்.

இப்போது சைஃப் அலி கானின் மகள், மற்றும் ஷாகித் கபூரின் சகோதரர் இருவரையும் அறிமுகம் செய்யவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!