நாய்கள் கொலை: கேரள முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த சோனாக்ஷி சின்ஹா!
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதலைமச்சர் உம்மன் சாண்டிக்கு ட்விட்டர் ஒன்றை போட்டுள்ளார்.
அதில் கேரளாவில் தெரு நாய்களை கொலை செய்வதை தடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சருக்கு அவர் கொடுத்துள்ள ட்வீட்டில் ’இந்த மனிதநேயமற்ற செயலை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சோனாக்சி சின்ஹாவின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் உம்மன் சாண்டியை ட்விட்டரில் இணைத்து விஷயத்தை பரப்ப வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இதே போல் நடிகர் விஷால் சில நாட்களுக்கு முன்பு இந்த நாய்கள் கொலைக்கு எதிராக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் தெருக்களில் உள்ள நாய்கள் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கின்றன என அவைகளை கொடூரமாக கொலை செய்து வருகிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், சமூக வலைகளில் எதிர்ப்புகள் நடந்து வருகின்றன. இதற்கு விஷால் சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
I request the CM of Kerala @Oommen_Chandy to stop culling stray dogs in Kerala..u should too! Go on...tell him to stop this inhuman act!
— Sonakshi Sinha (@sonakshisinha) September 4, 2015