சன்னி லியோன்விளம்பரம் குறித்து சர்ச்சைக் கருத்து:மாட்டிக்கொண்ட அரசியல் பிரமுகர்!

  பாலிவுட் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்து அந்த விளம்பரம் யூடியூப் துவங்கி டிவிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அதுல் அன்ஜான் கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

சன்னி லியோன் என்ற ஆபாச பட நடிகை ஏராளமான ஆபாச படங்களில் நடித்துள்ளார். நடித்தும் வருகிறார். இப்போது ஒரு ஆணுறை விளம்பரம் ஒன்றில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளார். இது டிவிகளில் ஒளிபரப்பானால் பெண்களுக்கு எதிரான பாலாத்கார செயல்கள் அதிகரித்து விடும் எனக் கூறியுள்ளார். 

இவர் கூறிய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருக்கும் நாடுகளில் ஆணுறை விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை. அந்த விளம்பரங்களையும், அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளையும் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. மேலும் ஒரு நடிகையை இப்படி பலர் மத்தியில் சாடுவதும் ஏற்புடையதல்ல என பலர் எதிர்ப்புக் தெரிவித்த நிலையில், கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் அதுல் அன்ஜான். 

நான் ஆணுறைக்கு எதிரானவன் அல்ல, என்னை அப்படி சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. எனினும் நான் தெரிவித்த கருத்து யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற ஆபாச விளம்பரங்களுக்கு கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பேன் எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து சன்னிலியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார், இதுபோன்ற மக்கள் என்னை குறித்து தவறாக பேசியே எனர்ஜியை வீணடிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.அதற்கு பதில் தேவைப்படும் மக்களுக்கு உதவலாமே எனக் கூறியுள்ளார். 

சன்னிலியோனின் கருத்துக்கு சினிமா பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதில் ஷில்பா ஷெட்டி எல்லாரும் இது போல் நினைப்பதில்லை, ஒரு சில்ல இப்படி கீழ்த்தரமாக கருதுவது எல்ல இடங்களிலும் நடப்பதே. இம்மாதிரியான வேடிக்கையான ஆட்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தராதே எனவும் சன்னி லியோனுக்கு கூறியுள்ளார் ஷில்பா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!