'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மீண்டும் சல்மான் கான்! | Salman Khan tweeted: ‘Bigg Boss 9’ is mine

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (05/09/2015)

கடைசி தொடர்பு:11:20 (05/09/2015)

'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மீண்டும் சல்மான் கான்!

"பிக் பாஸ் 9" நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறார் பாலிவுட் டாப் நடிகர் சல்மான் கான். கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய சல்மான் கான் 8ம் பாகத்தையும் நடத்த இருந்த வேளையில் குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனால் 8ம் சீசனை அவர் தொகுத்து வழங்க முடியவில்லை. இந்நிலையில் நடன இயக்குனரும், இயக்குனருமான பாராஹ் கான் தொகுத்து வழங்கினார். சல்மான் கான் இல்லாத காரணத்தால் நிகழ்ச்சியின் ரேட்டிங்கும் குறைந்து போய் , பார்வையாளர்களும் குறையத்துவங்கினர். தற்போது மகிழ்ச்சியான தகவலாக விரைவில் துவங்க இருக்கும் புது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்குவார் என்று கலர்ஸ் டிவியின் CEO ராஜ் நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து உறுதிபடுத்தியுள்ளார்.

இதனை சல்மான் கானும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்9 ‘ என்னுடையது ‘ என ட்வீட் செய்துள்ளார். இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியாக வரவேற்த்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷூட்டிங் நேற்று நடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பே சல்மான் கான் தான் என்ற நிலையில் மீண்டும் அவர் வருவது சேனலுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தற்சமயம் தனது அடுத்த தயாரிப்பான "ஹீரோ" படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார் சல்மான் கான். இன்று இப்படத்தின் ப்ரோமோஷன் ஜர்கண்டில் நடைபெறுகிறது. படம் செப்டம்பர் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டார் கிட்ஸ் என செல்லமாக அழைக்கபடும் சூரஜ் பன்சோலி மற்றும் ஆதித்யா ஷெட்டி ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ள இப்படம் 1983ம் வருடம் ஜாக்கி ஷெரப் நடிப்பில் வெளியான பழைய ’ஹீரோ’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close