நடிகரை காதலித்தால் சிக்கல்- வெளிப்படையாகப் பேசும் நடிகை

குயின், தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களின் வெற்றியினால் உயர்ரக நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். தமிழில் ஜெயம்ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்தவர்.

இந்தி நடிகை யாரும் வாங்காத அளவிற்கு கங்கனா தற்பொழுது 11 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, “ நான் அதிக சம்பளம் வாங்குவதாக விமர்சிக்கப்படுகிறது. ஒரே படத்துக்கு அதிக நாட்கள் நடித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. கதையும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற படங்களாக எனக்கு அமைகிறது. எனவே அதற்கேற்ப சம்பளம் வாங்குகிறேன் என்றார்.

மேலும் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “ என் படங்களில் மட்டும் தான் காதல் காட்சிகள் இருக்கும். நிஜ வாழ்க்கையில் இல்லை. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை.

குறிப்பாக சக நடிகரை காதலிக்க மாட்டேன். ஏனெனில் சினிமா துறையே போட்டி நிறைந்தது. எனவே ஒரே துறையில் காதலித்தால் சரியாக இருக்காது. நடிகர் அல்லாத என் மனம் திருடவிருக்கும் கள்வரை தேடிக் கொண்டிருக்கிறேன்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!