சல்மான் கானை கடுப்பேற்றினாரா ஆதித்யா?

 சல்மான் கான் தயாரிப்பில் சூரஜ் பன்சோலி, மற்றும் ஆதித்யா ஷெட்டி நடிப்பில் செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ள படம் ஹீரோ. 1983ம் ஆண்டு ஜாக்கி ஷெரப் நடிப்பில் வெளியான ‘ஹீரோ’ படத்தின் ரீமேக் தான் இந்த வருடம் வெளியாக உள்ள இந்த ஹீரோ. 

படத்தின் புரமோஷன்களுக்காக சல்மான் கான், ஹீரோ ஹீரோயின் உட்பட படக்குழு இந்தியாவின் முக்கிய இடங்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சல்மான் கான் தான் சூரஜ் மற்றும் ஆதித்யா இருவருக்கும் பிரம்மாண்ட அறிமுகம் கொடுத்தவர் என்று கூற வேண்டும். 

ஆனால் சமீபத்தில் ஆதித்யா ஷெட்டி கொடுத்த ஒரு பேட்டியில் பிடித்த நடிகர் ஷாருக் கான் எனக் கூறியுள்ளார்.  மேலும் ஷாருக் கான் தான் ரியல் ஹீரோ எனவும் கூறிய அவர் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார். 

மெயின் ஹூன் நா படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தான் ஷாருக் கானை நான் ஒருமுறை சந்தித்தேன். மிகவும் பணிவாக நடந்துகொண்டவர் மொத்த படப்பிடிப்புத் தளத்தையும் எனக்கு சுற்றிக் காட்டினார் எனக் கூறினார்.மேலும் அவர் ஜென்டில் மேன் எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஹீரோ படக்குழு கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். எனினும் சல்மான் கான் கொஞ்சமும் தயங்காமல் பிடித்த நடிகர் என்பது அவரவர் விருப்பமான ஒன்று. அதற்கும் படத்திற்கும் சம்மந்தமில்லை.ஆதித்யா நல்ல நடிகை என்பது ஹீரோ படத்தின் மூலம் தெரியவரும் என ஆதித்யாவை பாராட்டியுள்ளார் சல்மான் கான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!