வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (08/09/2015)

கடைசி தொடர்பு:18:21 (08/09/2015)

கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் பாகம் 3: அனுரக் கஷ்யப்பின் அடுத்த அதிரடி ஆரம்பம்!

 பாம்பே வெல்வெட் படம் மூலம் பாலிவுட்டில் புயலைக் கிளப்பிய அனுரக் கஷ்யப் அடுத்ததாக இவரது வெற்றிப் படம் கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தின் மூன்றாம் பாகத்தை ஆரம்பிக்க இருக்கிறார். இவரது நோ ஸ்மோகிங், பாம்பே டாக்கீஸ், அக்லி, பாம்பே வெல்வெட் என அனைத்து படங்களும் மெகா ஹிட் லிஸ்ட். 

இப்போது ப்ளாக்பஸ்டர் படமான ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூன்றாம் பாகத்தின் வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார். மேலும் இந்த பாகத்தின் கதையை எழுத நடிகர், எழுத்தாளர், இயக்குநர் ஸீஷான் குவாத்ரியிடம் பேசியுள்ளார். 

இதுகுறித்து ஸீஷான் கூறுகையில் , எனது முதல் இயக்கத்தில் வெளியான மீருதியா கேங்ஸ்டர்ஸ் படத்தை பார்த்துவிட்டு என்னை வெகுவாக பாராட்டினார் அனுரக். மேலும் கேங் ஆஃப் வாசீப்பூர் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதையை எழுதுமாறு கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது அவ்வளவு பெரிய இயக்குநர் என்னை சந்தித்து தன் படத்திற்கு கதை எழுத சொன்னது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

அனுரக் கஷ்யப் கூறுகையில் ஸீஷானிடம் இப்படி ஒரு படத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவரது மீருதியா கேங்ஸ்டர் படம் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது எனக் கூறியுள்ளார் அனுரக் கஷ்யப். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்