வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (09/09/2015)

கடைசி தொடர்பு:13:03 (10/09/2015)

மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட பிரபலநடிகரின் மகள், அதிர்ச்சியில் திரையுலகம்

விக்ரம் படமான பத்துஎண்றதுக்குள்ள படத்தில் வில்லனாக நடித்துவரும் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். தமிழில் ஆரண்யகாண்டம் படத்தில் நடித்தவரான இவர் பாலிவுட் மட்டுமில்லாது தெலுங்கு, மராத்தி, பெங்காலி என்று அனைத்து மொழிகளிலும் தேடப்படும் முக்கிய நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் மகளான கிருஷ்ணா ஷெராப், அவருடைய சமுக வலைதளத்தில் மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை அப்லோட் செய்ய இணையமே பற்றிக் கொண்டது. அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவின் மேல் ஆர்வம் காட்டாமல் இருக்கும் கிருஷ்ணா ஷெராப் இவ்வாறான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அவரின் தந்தைக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தந்தை பெரிய நடிகர். இவரின் பொண்ணா இப்படி செய்தது என்று இணையத்திலும் ரசிகர்கள் புலம்பிவருகின்றனராம். 20 வயதான கிருஷ்ணா ஷெராப்புக்கு நடிக்கும் ஆர்வம் வந்துவிட்டதாகவும், அதற்காகத்தான் இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்