வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (10/09/2015)

கடைசி தொடர்பு:17:37 (10/09/2015)

முருகதாஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மூத்தநடிகர்

முருகதாஸ் இந்தியில் இயக்கிக்கொண்டிருக்கும் அகிரா படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாமல் இழுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தைத்தான் அவர் இந்தியில் எடுக்கிறார் என்றாலும், அங்கு திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறர்கள்.  நாயகிக்கு அப்பா பாத்திரம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

அந்தப்பாத்திரத்தில் நாயகியாக நடிக்கும் சோனாக்ஷியின் அப்பா சத்ருகன்சின்காவையே நடிக்கவைக்கத் திட்டமிட்டார்களாம். அவருடம் இதுபற்றிச் சொல்ல அவரும் நடிக்க ஒப்புக்கொண்டாராம், ஆனால் கடைசிநேரத்தில் அவர் நடிக்கவில்லையென்று சொல்லப்படுகிறது.

அந்தப்பாத்திரத்துக்கு நான்கைந்துநாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் போதுமாம். அதற்காக சத்ருகன்சின்கா கேட்ட சம்பளம் மிகப்பெரிது என்று சொல்லப்படுகிறது.

மகள் நாயகியாக நடிக்கும் படமென்பதால் சம்பளவிசயத்தில் கறாராக இருக்கமாட்டார் என்று நினைத்த படக்குழுவினருக்கு இதனால் அதிர்ச்சியாம்.  அவர் கேட்கும் சம்பளத்தைத் தரமுடியாது என்பதால் இப்போது அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகரைத் தேடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்