இந்தி பட வாய்ப்பையே நிராகரித்த ஸ்ருதி ஹாசன்!

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என மூன்று திரையுலகிலும் ஓய்வே இல்லாமல் நடித்துகொண்டிருப்பவர் ஸ்ருதி ஹாசன்.இவர் நடித்து பாலிவுட்டில் சென்ற வாரம் ரீலீஸ் ஆகி சக்கை போடு போட்டுகொண்டிருகிறது "வெல்கம் பெக்". அணில் கபூ, ஜான் ஆபிரகாம், நானா படேகர் என மிகப்பெரிய நடிகர்களுடன் இவர் நடித்த படத்திற்கு வசூலும் கொட்டத் துவங்கியுள்ளது.

இதற்கிடையில் "தி டர்ட்டி பிக்சர்" புகழ் "மிலன் லுத்ரியா" வின் அடுத்த படமான "பாட்ஷாஹோ" வில் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது சுருதி ஹாசன் இப்படத்திலிருந்து விலகியுள்ளார்.

முதலில் கதையில் தனது கதாபாத்திரம் பிடித்திருந்த காரணத்தினால் ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் படத்தின் முழு கதையையும் கேட்டறிந்த பின்பு, கதையில் தனக்கான கதாபாத்திரத்தின் பங்கு அவ்வளவு முக்கியத்தும் வாய்ந்ததாக இல்லை என தெரிந்ததால் படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ருதி ஹாசன் தற்சமயம் இந்தியில் "ராக்கி ஹேண்ட்சம்", "யாரா", தமிழில் "புலி" , "தல 56" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பல நடிகைகள் இந்தி வாய்ப்பிற்காக காத்திருக்கும் வேளையில் ஸ்ருதி வந்த வாய்ப்பையே நிராகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

- ப்ரியதர்ஷினி - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!