சல்மானுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!

2015 தீவாளி ரிலீஸ் ஆகவிருக்கும் "பிரேம் ரத்தன் தான் பயோ" படத்திற்க்கு பின்பு சல்மான் கான் நடிக்கவுள்ள படம் "சுல்தான்".

இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப், தீபிகா படுகோனே முதல் கங்கனா ரணவத், பிரியங்கா சோப்ர, பரிநீதி சோப்ரா என இத்தனை பேரையும் அணுகிய பிறகு இந்த வாய்ப்பு அனுஷ்கா ஷர்மாவுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இதற்கு முன்பு அனுஷ்காவும், சல்மானும் ஜோடி சேராத நிலையில், இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்க போவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பட பிடிப்புகள் வருகிற நவம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும், அதற்குள் அனுஷ்கா தற்போது லண்டனில் நடித்து வரும் கரன் ஜோஹரின் "அயே தில் ஹை முஷ்கில்"  படத்தின் முதற் கட்ட பட பிடிப்புகளை முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

சுல்தான் படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் சபார் முன்னதாகவே இப்படத்தின் ப்ரி புரோடக்க்ஷன் வேலைகளை தொடங்கி, தற்போது இப்படத்தின் சண்டை காட்சிகளுக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் "லார்நெல்  ச்டோவல்"லுடன் கலந்துரையாடலில் உள்ளார். சுல்தான் 2016 இல் ஈத் பண்டிகை அன்று வெளிவர இருக்கிறது. 

பிரியதர்ஷினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!