வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (11/09/2015)

கடைசி தொடர்பு:13:41 (12/09/2015)

அசாரூதீன் கதையில் பாலிவுட் சீரியல் கிஸ்ஸர் இம்ரான் ஹாஷ்மி!

டோனி டிசோசா இயக்கத்தில் இம்ரான் ஹாஷ்மி நடிப்பில் உருவாகிவரும் பயோபிக் படம் "அசார்". இப்படம் முன்னால் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் வாழ்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது.   பயோபிக் படங்களான "சக்தே இந்தியா", "தி டார்ட்டி பிக்சர்", "மேரி கோம்" படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டின் புதிய ட்ரெண்டு பயோபிக் கதைகள் தான்.

இந்த வரிசையில் இப்போது இணைந்து படம் அசார். படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் நடந்து வருகின்றன, இதில் கதையின் உண்மையான கதாநாயகன் முகமது அசாருதீன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளாராம். இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டன் சென்ற படக் குழுவினரோடு அசாரும் புறப்பட்டு சென்றுள்ளார்.

இயக்குநருடன் தனது கருத்துகளை பரிமாறிக்கொள்வதோடு மட்டுமின்றி, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு முதல் ஆளாக வருவது, சீன்களில் வரும் கிரிக்கெட் காட்சிகளில் , பிட்சுகளை தானே களத்தில் இறங்கி சரி செய்வது, மேலும் படக்குழுவினருக்கு கிரிக்கெட் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் ஏற்ப்பட்டால் உடனே சரி செய்வது என மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கிறாராம்.

இது பற்றி படகுழுவினர் கூறுகையில் " இப்படம் வெற்றி அடைந்தாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி, கிரிக்கெட் பற்றிய படங்களின் வரிசையில் "அசார்" படத்திற்கு தனி இடம் இருக்கும்" என்று கூறியுள்ளனர்.ஏனெனில் அசாருதீன் இப்படத்தில் தன்னை அவ்வளவு ஈடுபடுத்தியுள்ளார். பாலாஜி மோஷன் பிக்சர் மற்றும் MSM மோஷன் பிக்சர் இணைந்து தயாரிக்கும் இப்படம் 13 மே 2016ல் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படக்குழு உள்ளனர்.

- பிரியாவாசு -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்