அசினுக்கு 6 கோடி மதிப்புள்ள பெல்ஜிய வைரமோதிரம் பரிசளித்த காதலர்!

தமிழில் கமல்ஹாசன் உட்பட டாப் கதாநாயகர்கள் விஜய், அஜித், சூர்யா இவர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அசின். A . R . முருகதாஸ் இயக்கத்தில் நடித்த "கஜினி" மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்படம் இந்தியிலும் அமீர்கான் நடிப்பில் ரீமேக் ஆனது. அதில் ஹீரோயினாக நடித்த அசின் அதில் கிடைத்த வெற்றியை அடுத்து தமிழ்ப் பக்கமே வராது தனக்கென ஒரு இடத்தை பிடித்து அங்கேயே செட்டிலானார்.

தொடர்ச்சியாக சல்மான் கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தற்போது தொழிலதிபர் ராகுல் ஷர்மாவுடன் திருமண ஆகவிருப்பதாக அறிவித்தார் அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனரான ராகுல்ஷர்மா காதல் பரிசாக வைர மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 

20 காரட் சாலிடர் வைரமோதிரமான அந்த மோதிரம் ஸ்பெஷலாக பெல்ஜியத்திலிருந்து வரவழைக்கப் பட்டதாம். இதில் AR என அசின் மற்றும் ராகுலின் முதல் எழுத்து மோனோக்ராம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அசின், ராகுல் இருவரின் நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறாத நிலையில், இம்மோதிர செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அசின் நடிப்பில் அண்மையில் வெளியான ஆல் ஈஸ் வெல் படம் எதிர்பார்த்த வெற்றிகளை அளிக்காத நிலையில் தற்போது விரைவில் திருமண ஏற்பாடுகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- பிரியாவாசு -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!