சினிமாவில் நல்லநண்பர்களுக்கு இதுதான் அர்த்தம் - கங்கனா ரனாவத் அதிரடி | Kangana Ranaut confesses what stars mean when they say they're just good friends

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (16/09/2015)

கடைசி தொடர்பு:10:54 (19/09/2015)

சினிமாவில் நல்லநண்பர்களுக்கு இதுதான் அர்த்தம் - கங்கனா ரனாவத் அதிரடி

பாலிவுட்டின் குயின் படம் மூலம் தேசிய விருது பெற்ற கங்கனா ரனாவத் சமீபத்தில் சினிமா துறையினரின் நட்பு குறித்து தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சையாகியுள்ளது. அதிகம் கிசுகிசுக்களில் சிக்காத கங்கனா ரனாவத் சினிமா துறையில் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என அடிக்கடி கூறுவது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் கட்டி பட்டி படத்திற்கான புரமோஷனுக்காக கங்கனாவும், இம்ரான் கானும் இணைந்து கொடுத்த ஒரு  பேட்டியின் போது, தொகுப்பாளர், சினிமா பிரபலங்கள் நாங்க நண்பர்கள் மட்டுமே அப்படினு கிசுகிசுக்கு முற்றிப்புள்ளி வைப்பதற்காக சொல்கிறார்களே. அது குறித்து உங்கள் கருத்து என்ன எனக் கேட்க அதற்கு  சர்ச்சையான பதில் கூறியுள்ளார் கங்கனா.

“சினிமாவைப் பொறுத்தவரை, நல்ல நண்பர்கள் என்று கூறினால், அதற்கு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் என்று அர்த்தம்” என்று பதில் கூறி அதிரவைத்தார்.மேலும் இம்ரான் கானும் ஆம், அதில் அவ்வப்போது ரொமான்ஸ் இருக்கும் எனக் கூறி ஆமோதித்துள்ளார். இதனால் பாலிவுட்டின் சினிமா தரப்பு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள சினிமா பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஏனெனில் பல பிரபலங்கள் தங்கள் ஜோடியாக சுற்றுவதை ஒட்டி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லும் பதில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதே. கங்கனாவின் இந்த பதில் பலரையும் சூடாக்கியுள்ளது..

 அதே போல், நான் இரண்டாம் தர படத்தில் தான் நடிக்கத் துவங்கினேன், எனினும் இப்போது தேசிய விருது பெற்று மிகச் சிறிய காலக்கட்டத்தில் நம்பர் ஒன் நடிகை ஆகிவிட்டேன். இன்னும் பல நடிகைகள் பல வருடங்களாக சினிமாத் துறையில்  வளராமலேயே உள்ளனர் என அவர் கூறியதும் நடிகைகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவைக் காண: 

 

Kangana Ranaut confesses what stars mean when they say they're "just good friends".

Posted by BuzzFeed India on Saturday, September 12, 2015

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close