அஜித், விக்ரமைத் தொடர்ந்து அமீர்கான்! | AmirKhan Increased his weight to 35Kg!

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (16/09/2015)

கடைசி தொடர்பு:16:06 (21/09/2015)

அஜித், விக்ரமைத் தொடர்ந்து அமீர்கான்!

பாலிவுட்டின் கச்சிதமான மனிதர் என்று பெயரெடுத்து, தான் ஒப்புக்கொண்ட வேலையை மிக சரியாக முடிப்பவர் அமீர்கான். இதன் மூலம் பல இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் மனதை கவர்ந்தவர்.அவ்வளவு எளிதில் ஒரு வேலையை ஒப்புகொள்ள மாட்டார், அப்படி ஒப்புக்கொண்டால் அதற்கென மெனக்கெடுவதில் இவருக்கு நிகர் இவரே.நம்மூர் விக்ரம் போல் எடுத்துகொண்ட கேரக்டருக்காக கொஞ்சம் அதிகமாக மெனக்கெடவும் செய்வார்

.

இவர் நடித்த கஜினி, தூம் 3 ஆகிய படங்களில் இவரது சிக்ஸ் பேக் உடலமைப்பிற்காகவே ரசிகர்கள் அதிகம். தற்போது இவர் நடித்து வரும் "தங்கால்" திரைபடத்தில், இரண்டு மகள்களுக்கு தந்தையாகவும், மேலும் இதில் மல்யுத்த வீரராகவும் நடிப்பதால், தனது உடல் எடையை 35 கிலோ உயர்த்தியுள்ளாராம். இதில் அமீர் முதல் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகிறார்.நம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அஜித் போல்.

 உடல் எடை அதிகரித்துள்ளதால் அவரால் சரியாக நடக்க முடியாமலும், மூச்சு விட சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது. அமீர்கான் இது பற்றி கவலை கொள்ளவில்லை என்றாலும், அவரது குடும்பத்தினர் மிகவும் கவலையில் உள்ளனர்.மேலும் பாலிவுட்டின் கான் நடிகர்கள் மூவருக்கும் அவர்களின் சிக்ஸ் பேக் தான் சிறப்பே என்ற நிலையில் அமீர்கான் உடல் எடை ஏற்றியுள்ளது அவரது ரசிகர்களுக்கும் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வால்ட் டிஸ்னி தயாரிப்பில்,நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் மல்யுத்த வீரர் மகாவீர் சிங்க் போகத்தின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு உருவாகிவருகிறது. தனது இரண்டு மகள்களுக்கும் மல்யுத்தம் கற்றுத் தந்த தந்தைப் பற்றிய கதை தான் "தங்கால்". இப்படம் 2016, டிசம்பர் 23 தேதி ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படக்குழு உள்ளனர்.சக் தே இந்தியா, மேரி கோம், அசார் வரிசையில் பாலிவுட்டின் அடுத்த விளையாட்டு வீரச் சார்ந்த பாயோபிக் படம் இந்த தங்கால் எனலாம். 

- பிரியாவாசு- 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close