'ஆக்ஷன் கிங்' என நடிகருக்கு எமி ஜாக்சன் புகழாரம்!
சிங் ஈஸ் ப்ளிங் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ள எமி ஜாக்சனிடம் அக்ஷய் குமாருடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டபோது,
அக்ஷய் குமார் பத்தி சின்ன வார்த்தைகள்ல சொல்லிவிட முடியாது. அவர் பாலிவுட்டின் ஆக்ஷன் கிங். நிறைய விஷயங்களை நான் ஒரு நபரிடம் கற்றுக்கொண்டேன் என்றால் அது அக்ஷய் குமார் தான். எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அவர்தான். நம்மைக் கச்சிதமாக வைத்துக்கொள்ள அக்ஷய் எப்போதும் உதவுவார். மேலும் அவர் தான் ராதிஜியின் (அக்னிஹோத்ரி)உடல் எடை குறைய நிறைய உதவிகள் செய்தார்.
இப்போது உடல் எடைக் குறைந்து அவர் கச்சிதமாக கானப்படுகிறார் என்றால் அதற்கு அக்ஷய் தான் காரணம். பாலிவுட்டின் டாப் நடிகருடன் எனக்கு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.