துல்கருக்கு ஜோடியாகிறார் ஸ்ரீதேவி மகள்?

பிரபலங்களின் வாரிசுகள் நடிக்க வருவதும், அதில் சில பேர் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதும், சில பேர் வந்த சுவடே தெரியாமல் போய்விடுவதும் எப்போதும் திரை துறையில் நடந்து கொண்டிருக்கும் விஷயம் தான். தற்போது திரை துறையில் நுழைய போவது பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூர்.இவர் ஏற்கனவே படத்தில் நடிப்பார் என அவ்வப்போது வதந்திகள் வருவதும் பின் இல்லை என மறுப்பதுமாக நடந்துகொண்டே தான் இருக்கிறது.

இப்போது மீண்டும் ஸ்ரீதேவி, போனி கபூரின் மகளாகிய ஜானவி கபூர், துல்கர் சல்மானுடன் இணைந்து, பல மொழிகளில் உருவாகும் படம் ஒன்றில்  நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.  ரஜமௌலியின் வரலாற்று படைப்பான பாகுபலி கதையை எழுதிய கே.வி. விஜயேந்திர பிரசாத், இப்படத்தின் கதையை எழுதவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு  என தனது நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி, இவரின் மகள் ஜானவி கபூர் நடிக்க வருவது குறித்து நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் இப்பொதைக்கு அப்படி ஏதும் நாங்கள் உறுதி செய்யவில்லை என்கின்றனர். எனினும் நெருப்பில்லாமல் எப்படி புகையும், ஹீரோ, கதை எழுத்தாளர் வரைக்குமா கிசுகிசுக்களில் வரும் என்றும் தோன்றுகிறது. 

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!