வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (23/09/2015)

கடைசி தொடர்பு:13:20 (23/09/2015)

படப்பிடிப்பில் கண்கலங்கிய சல்மான்கான்: காரணம் என்ன?

மெகா ஹிட்டான "பஜ்ராங்கி பாய்ஜான்" படத்திற்கு பிறகு சல்மான் கான் நடித்து வரும் படம் "பிரேம் ரத்தன் தான் பாயோ". இப்படத்தின் படபிடிப்பின் போது, ஒரு உருக்கமான காட்சியில் சல்மான் தன்னை கட்டுபடுத்த முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு, தன்னையும் மீறி அழுது விட்டாராம். இதை பார்த்த இயக்குநர் சூரஜ் பார்ஜத்யா மற்றும் ஹீரோயின் சோனம் கபூர் உட்பட செட்டில் இருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டனராம்.

சல்மான் கான் முன்னதாகவே "பஜ்ரங்கி பாய்ஜான்" பட புரோமோஷனில் பேசியபோது "பஜ்ராங்கி பாய்ஜான்" எல்லை தாண்டிய இந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றிய கதை, அனால் "பிரேம் ரத்தன் தான் பாயோ" ஒரு குடும்பத்தில் அண்ணன், தங்கைகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை கூறும் படம், எனவே அனைவரும் உணர்ச்சிவசப் பட தயாராக இருங்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தில் நடித்துவரும் ஹீரோவான சல்மானையே உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டதே என அனைவரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

- பிரியாவாசு -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்