வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (23/09/2015)

கடைசி தொடர்பு:15:15 (23/09/2015)

உலகின் மிகப்பெரிய லட்டு...திறந்து வைத்தார் ஆளவந்தான் நாயகி ரவீனா டாண்டன்!

விநாயகர் சதுர்த்தி சிறப்பாக மும்பையின் பிரபல அந்தேரி சா ராஜா எனப்படும் லால்பாக் சா ராஜா விநாயகருக்காக வருடா வருடம் வைக்கப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு சிறப்பாக பிரசாதமாக கொடுக்க உலகிலேயே மிகப்பெரிய லட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

42 பேர் இணைந்து 8,645 கிலோ அளவிலான லட்டை 5 நாட்களில் உருவாக்கி உள்ளனர். இதற்கு முன்பு 7, 858 கிலோ அளவிலான லட்டை ஆந்திராவின் ஸ்வீட் கடை ஒன்று செய்து உலக சாதனை படைத்தனர். தற்போது அந்த சாதனை மும்பை லட்டால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த லட்டை பாலிவுட்டின் பிரபல நடிகை ரவீணா டாண்டன் திறந்து வைத்துள்ளார். இவர் கமலின் ஆளவந்தான் படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மஞ்சள் நிற எம்பிராய்டரி ஷீர் சேலையில் ரவீனா பக்தியுடன் காணப்பட்டார். இந்த சேலையை டிசைன் செய்தவர் மணீஷ் மல்ஹோத்ரா என்பது குறிப்பிடத்தக்கது. பூஜை முடிந்தபின்பு இந்த உலக மகா லட்டு மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்