சல்மான்கான், ஷாருக்கான், சானியா மிர்சா விற்பனைக்கு!

உத்தர பிரதேஷத்தில் உள்ள ஒரு ஆட்டுச் சந்தையில், பாலிவுட்டின் டாப் நடிகர்களான ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் என பிரபலங்கள் விற்கப்பட்டுள்ளனர். திரையுலகில் டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களை தாங்கள் விற்கும் பொருட்களுக்கு வைத்து விற்பது, வியாபாரிகளின் வியாபார யுக்திகளில் ஒன்று.

இதுவரை ஆடைகள், அலங்காரப் பொருட்கள், சாப்பாடு,குளிர்பானங்கள் என்று இருந்த விஷயம், இப்போது ஆடு வரை சென்று விட்டது. பக்ரீத் திருநாளான நேற்று விற்கப்பட்ட ஆடுகளுக்கு இப்படி ஷாருக் , சல்மான் என்று பெயர் வைக்கப்பட்டு 15,000 முதல் 1 லட்சம் வரை விற்கபட்டுள்ளது..

இதனால் அங்கு கூட்டம் அலை மோதியுள்ளது. மேலும் திரை நட்சத்திரங்களின் பெயர்கள் தவிர சானியா மிர்சா போன்ற விளையாட்டு பிரபங்களின் பெயர்களிலும் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. சானியா என்று பெயர் சூட்டப்பட்ட அந்த ஆடு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்துள்ளது என ஆட்டுச் சந்தையிலிருந்து வந்த நிலவரம் கூறுகிறது. என்ன ஒரு விளம்பரம்...... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!