தீபிகா படுகோனேவுக்கு ஆண்கள் உலகத்தில் கிடைத்த கௌரவம்!

GQ எனப்படும், ஆண்களின் பேஷன் மற்றும் ஸ்டைல் குறித்த பத்திரிகை, தீபிகாவிற்கு 2015க்கான "வுமன் ஆப் தி இயர்" விருதை வழங்கியுள்ளது. தனது முதல் படமான ஓம் சாந்தி ஓம் படம் மூலம், பாலிவுட்டின் ஷேஹன்ஷா என்றழைக்கபடும் ஷாருக்கான்னுடன், இணைந்து நடித்து, தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தீபிகா படுகோனே.

அன்று முதலே தனது தனி திறமையாலும், அழகாலும், நடிப்பாலும் பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவரானார். இந்த வருடம் தீபிகா நடிப்பில் வெளிவந்த "பிகு" அனைவரது கவனத்தையும் ஈர்த்த படம். முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற IIFA விருதில் "வுமன் ஆப் தி இயர்" விருதை தீபிகா பெற்றார்.

இதே வருடத்தில் தீபிகா  இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அக்‌ஷய் குமாருக்கு தி அல்டிமேட் மேன் ஆஃப் தி இயர், மற்றும் ரன்பீர் கபூருக்கு ஆக்டர் ஆஃப் தி இயர் விருதுகளும் கிடைத்துள்ளன. கூகுள் தேடலில் வருடா வருடம் டாப் 5 லிஸ்டில் கண்டிப்பாக தீபிகா படுகோனே இடம்பிடித்து விடுவதும் நாமறிந்ததே. தற்போது ரன்பீர் கபூருடன் இவர் இணைத்து நடித்துள்ள "தமாஷா" படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இந்தப்படம் பணம் மற்றும் காதல் இரண்டுக்குமான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

- பிரியாவாசு -

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!