சீக்கிய உடையில் கலக்கிய எமி ஜாக்சன்

பிரபு தேவா இயக்கத்தில், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து அக்டோபர் 2ம் தேதி வெளிவர இருக்கும் படம் "சிங் இஸ் ப்ளிங்". இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஸ்டைல் அண்ட் தி சீக்' எனும் சீக்கிய சமூகத்தினரின் ஆடைகளை பரதிபலிக்கும் பேஷன் ஷோ நடைபெற்றது.

இதில் எமி ஜாக்சன்,  முன்னால்உலக அழகி லாரா தத்தா, அக்‌ஷய் குமார் ஆகியோர் சீக்கிய உடைகளை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளரான ஜேஜே வலயா, இவர்களது ஆடைகளை வடிவமைத்திருக்கிறார்.

இவர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சீக்கிய கலாசார உடைகளை அணிந்திருந்தது கூடுதல் சிறப்பு. "சிங் இஸ் ப்ளிங்" வருகிற அக்டோபர் 2 தேதி ரிலீஸ் ஆகுகிறது.இப்படத்தின் பாடல்களும் , டீசர், டிரெய்லர் என நெட்டில் பட்டையைக் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது. 

- பிரியாவாசு - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!