புத்தகம் எழுதியுள்ளார் ஷில்பா ஷெட்டி!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கட்டுகோப்பான உடல் அமைப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். தமிழில் Mr. ரோமியோ, குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் எனப் பிரபலமானவர் ஷில்பா.பின்னர் முழுமையாக பாலிவுட்டின் பக்கம் ஒதுங்கினார்.

இவரும் ஐஸ்வர்யா ராய் போல் தனது மகனுக்காக, சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார், எனினும் இவரை பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமே இருந்தன. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் ஷில்பா.

 

இதற்காக சில கதைகளை அவர் படித்ததாகவும், ஆனால் அவை எதுவும் தனக்கு திருப்தி தரவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் ஷில்பா சமீபத்தில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சுகாதார உணவு முறைகளை பற்றிய அந்தப் புத்தகம், நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது, முன்னதாக ஃபிட்நெஸ் குறித்த DVD ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

-பிரியாவாசு - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!